பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
Jul 14, 2025, 10:51 IST
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகை சரோஜாதேவி நடித்துள்ளார்.

ரசிகர்களிடையே கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அன்புடன் அழைக்கப்பட்டு வந்த நடிகை சரோஜாதேவி, தனது 14வது வயதிலேயே மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955ல் திரையுலகில் அறிமுகமானார்.

தனது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை நடிகை சரோஜாதேவி பெற்றுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
