பிரபல இயக்குநர், கதாசிரியர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் நேரில் அஞ்சலி!
திரையுலகில் சிறந்த கதை ஆசிரியர் மற்றும் இயக்குநராக புகழ் பெற்றவர் எஸ்.எஸ். டேவிட். இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஆர் ஆர் நகரில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனை மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 55.

இவர் 1990களில் 'ஜெய்ஹிந்த்', 'தைரியம்' உட்பட பல திரைப்படங்களை எழுதி இயக்கி, தனக்கென ஒரு பெயரை நிலை நாட்டினார். 'ஹை பெங்களூர்', 'போலீஸ் ஸ்டோரி' போன்ற திரைப்படங்களிலும் முக்கிய பங்களிப்பு அளித்திருந்தார்.

தனது தனிச்சிறப்பான திரைக்கதை நயத்தால் ரசிகர்கள் மத்தியில் இயக்குநர் டேவிட் பெரும் வரவேற்பை பெற்றவர். அவரது மறைவுக்கு திரைப்படக் கூட்டமைப்புகள், இயக்குநர்கள் மற்றும் கன்னட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்த எஸ்.எஸ். டேவிட்டின் மறைவு கன்னட சினிமா உலகிற்கு ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
