பிரபல தெலுங்கு பட நடிகர் ஃபிஷ் வெங்கட் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்!

 
ஃபிஷ் வெங்கட்

தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என பன்முகத் திறமை வாய்ந்தவர் பிரபலநடிகர் ஃபிஷ் வெங்கட். இவர்  சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  ஹைதராபாத்தின் சந்தன்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக நிலை மோசமாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு  உயிரிழந்தார்.

தெலுங்கு நடிகர் ஃபிஷ் வெங்கட்  காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்! 
மீன் வெங்கட் என பரிச்சயமான இவரது இயற்பெயர் மங்கலம்பள்ளி வெங்கடேஷ். முன்பாக முஷீராபாத் சந்தையில் மீன் விற்பனையாளர் இருந்ததால், ‘ஃபிஷ் வெங்கட்’ என்ற புனைபெயர் பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2000 ம் ஆண்டு “சம்மக்கா சரக்கா” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், குஷி, பன்னி, தில், யோகி, ராச்சா, கப்பர் சிங் போன்ற 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனை விட பார்வையாளர்களை கவர்ந்த பங்களிப்பை வழங்கியவர்.

தெலுங்கு நடிகர் ஃபிஷ் வெங்கட்  காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்! 
சமீபத்தில் இவருடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், வெங்கட் டயாலிசிஸில் மூலம் உயிர்பிழைத்து வந்தார்.  அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அவரது மகள் ₹50 லட்சம் தேவைப்படும் இந்த சிகிச்சைக்கு பொதுமக்களிடம் நிதி சேகரித்து வந்தார்.  ஆனால், மருத்துவர்களின் முயற்சிகள் பலன் அளிக்காமல் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் உயிரிழந்தார்.  அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?