வேட்டையன் படத்தில் அரசு பள்ளி குறித்து அவதூறு... இயக்குநர் மீது காவல்நிலையத்தில் புகார்!

 
வேட்டையன்
 

வேட்டையன் படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள அரசு பள்ளிக் குறித்து அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி வேட்டையன் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

வேட்டையன்

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட மாணவர் அணி தலைவர் மாரிமுத்து ராமலிங்கம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில்,  தமிழ் திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள வேட்டையன் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி வலைதளங்களில் பரவியதால் "சர்ச்சை" என்ற காட்சி வருகிறது. 

இதன் மூலம் அதில் படிக்கும் மாணவர்கள் மீதும், ஏற்கனவே பயின்ற என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மீதும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடும். இதனால் பள்ளி குறித்து தமிழ்நாடு முழுவதும் தவறான கருத்து ஏற்படும். இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் நன்கு படித்து வருகின்றனர். இப்பள்ளி 2009-10 ஆண்டில் தமிழ் நாட்டிலேயே சிறந்த அரசு பள்ளி என்ற விருது பெற்ற பள்ளி ஆகும். 

வேட்டையன்

இன்று வரை 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. ஆகையால் அரசுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காட்சியை அமைத்த இயக்குநர் ஞானவேல் மீது சட்டடப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டையன் திரைப்படத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!