’ வேட்டையன் ’ சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி!

 
வேட்டையன்

 தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்  வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ளாது. இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து   உத்தரவிடப்பட்டுள்ளது.லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட நட்சத்திர நடிகர்கள்  களம் இறக்கப்பட்டுள்ளனர். 

வேட்டையன்
அனிருத் இசையமைப்பில் நாளை அக்டோபர் 10ம் தேதி வியாழக்கிழமை  வெளியாக உள்ளது. வேட்டையன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்  இருவரையும்  ஒரே படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.  

வேட்டையன்

நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங்கிலும் சாதனை படைத்து வருகிறது.இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சேர்த்து ரூ 10 கோடி  வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் 3007 காட்சிகளுக்கு ரூ6.33 கோடி  வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!