இனி ட்விட்டரில் வீடியோ கால் வசதி... பயனர்கள் உற்சாகம்!

 
ட்விட்டரில் வீடியோ கால்

ட்விட்டரில் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது ட்விட்டர் பயனர்களிடையே பெரும் வரவேற்பைய்ஹும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபரில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்தே ட்விட்டரில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, ப்ளு டிக், ஆரஞ்சு டிக், மாத சந்தா என அதகளப்படுத்தி வருகிறார். மாதச்சந்தா கட்டாதவர்களின் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளார். அதே நேரத்தில் தொழில்நுப்ட அடிப்படையில் அதனை மேம்படுத்தி வருகிறார்.

ட்விட்டர் புதிய தேவை

ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.அந்த வரிசையில் தற்போது ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக இந்த வசதி  சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து,அதனை லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாக எலான்மஸ்க் ஈடுபட்டு வருகிறார். 

ட்விட்டர்

தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் தொடர்ந்து, பணியாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், போஸ்டுகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் எனவும் பதிவிட்டுள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web