விடிஞ்சா கல்யாணம்... வைரலாகும் நடிகர் பிரேம்ஜியின் பேச்சுலர் பார்ட்டி!

 
விடிஞ்சா கல்யாணம்... வைரலாகும் நடிகர் பிரேம்ஜியின் பேச்சுலர் பார்ட்டி!

விடிஞ்சா கல்யாணம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் பிரேம்ஜி,  நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பேச்சுலர் பார்ட்டி வைத்து அசத்திய புகைப்படங்கள் வீடியோ வைரலாகி வருகிறது. 

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட பிரேம்ஜிக்கு நாளை இந்து என்பவருடன்  திருத்தணியில் திருமணம் நடைபெற இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என வெகுசிலர் மட்டுமே திருத்தணியில் நாளை நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதால் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு பேச்சுலர் பார்ட்டி கொடுத்து அசத்தி இருக்கிறார் பிரேம்ஜி. இந்த பார்ட்டியில் வெங்கட் பிரபு, வைபவ், ஜெய், எஸ்.பி.பி. சரண் , மகேந்திரன், சுனில் ரெட்டி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். 


 

திருமண பத்திரிக்கை இணையத்தில் தவறுதலாக வைரலாகி விட்டது என்றும், திருமணத்தில் தங்கள் பிரைவசியை மதித்து மணமக்களை இருந்த இடத்தில் இருந்தே ரசிகர்கள் வாழ்த்துங்கள் என வெங்கட்பிரபுவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

பிரேம்ஜியின் தங்கை வாசுகி பாஸ்கரும் இணையத்தில் தங்கள் குடும்பம் அனைத்தும் பிரேம்ஜியின் திருமணத்தை எதிர்பார்த்து மகிழ்வுடன் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். 

பிரேம்ஜி திருமணம் செய்ய இருக்கும் இந்து என்பவர் சேலத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. வங்கி ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர்தான் பிரேம்ஜியிடம் முதலில் காதலை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web