விஜய் ஆண்டனி ‘பிரியாணி கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

 
விஜய் ஆண்டனி


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மார்கன்' என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  இப்படம் கலவையான விமர்சனங்களை  பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.  
இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். 


இந்த படம் அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக தெரிகிறது.  செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பட விழாவில் பங்கேற்ற விஜய் ஆண்டனி, விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் 'டம்மி' துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளித்தார்.  பின்னர் தனது பிறந்தநாளையொட்டி, பிரியாணி 'கேக்' வெட்டி வழங்கினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?