அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தவெக உடன் இருக்கும்... விஜய் நேரில் ஆறுதல்!

 
அஜீத்
 

சிவகங்கை   மாவட்டம், திருப்புவனம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணிபுரிந்து வருபவர்  அஜித்குமார். 27 வயதான இவர்  நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவலர்கள் தாக்குதலில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறையின் செயல்பாடு மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.

TVK vijay - ajith kumar familey

இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜூலை 3, 2025 காலை அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது  உருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.  
அதே நாள் மாலை, தவெக தலைவர் விஜய், அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று  அஜித்குமாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு  அஜித்தின் தாய் மற்றும் தம்பியை சந்தித்து, அவர்களின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறி அவர்களது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

அஜீத்

குடும்பத்திடம்  விஜய், “இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. கவலைப்பட வேண்டாம், தவெக உங்களுடன் எப்போதும் இருக்கும். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்போம். தைரியமாக இருங்கள்,” என  உறுதியளித்தார். இந்த நிதியுதவியும், ஆறுதல் வார்த்தைகளும் அஜித்தின் குடும்பத்திற்கு மன உறுதியை அளித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?