டிக்கெட்டும் கிடைக்கல... காலும் போச்சே... லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் விஜய் ரசிகர் விபரீதம்!!

 
லியோ

இன்று காலை 9மணிக்கு தமிழகம் முழுவதும் லியோ படம் வெளியாகியுள்ளது. பெரும் சர்ச்சைகள், எதிர்ப்புக்கள், கண்டனங்கள் வலுத்த போதிலும் விடாப்பிடியாக இன்று திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இருந்த நிலையில் அதிகாலை மற்றும் 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தீவிர ரசிகர்கள் கேரளா சென்று படத்தை பார்த்து திரும்பி கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

லியோ

செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா   மாநிலங்களிலும் லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

லியோ

 இந்நிலையில், லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகருக்கு கால் முறிந்துள்ளது. இச்சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடிகர் விஜயின் லியோ படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிந்து விட்டது.  அந்த இளைஞர் வலியில் அலறி துடித்தார்.திரையரங்க ஊழியர்கள் உடனடியாக   இளைஞரை மீட்டு மருத்துவசிகிச்சைக்கு பின்   அவருக்கு அறிவுரை கூறி   அனுப்பி வைத்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web