மாஸ் வீடியோ... ” கோட்” படப்பிடிப்பிற்காக துபாய் செல்லும் விஜய்!

நடிகரும், தவெக அரசியல் கட்சியின் தலைவருமான இளையதளபதி விஜய் தற்போது “கோட் “ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் திரைத்துறையுடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய் அண்ணா 😍#dubsakanna #memeskirukkan #singlecva #33372 #vijay pic.twitter.com/MvFLOk9oqr
— thooki_adichuruve_paathuko (@singlecva) May 11, 2024
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா ,ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அஜ்மல், சினேகா, லைலா , மீனாட்சி சவுத்ரி உட்பட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்து வருகிறார். செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் GOAT படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் துபாய் புறப்பட்டு சென்றார். தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்திருந்த நடிகர் விஜய் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக துபாய் புறப்பட்டு செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!