கொண்டாட்டம்... ‘கோட்’ படத்தில் 3 தோற்றங்களில் விஜய்?!

 
கோட்

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T) படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோட் படத்தில் நடிகர் விஜய் 3 தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதில் நடிகர் விஜய்யுடன் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட்

வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தில் விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் படத்தில் இன்னொரு பாடலைப் பாடியிருப்பதாக யுவன்சங்கர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், அந்த பாடல் விஜய் பிறந்தநாளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்
படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இரண்டு தோற்றங்களில் இருக்கும் விஜய் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது, மூன்றாவது தோற்றம் குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!