நடிகர் மோகன்லால் குடும்பத்தினருடன் சாப்பிட மறுத்த விஜய், வற்புறுத்தி அழைத்தும் விஜய் சொன்ன காரணம்?!

 
விஜய் ஜில்லா மோகன்லால்

நடிகர் விஜய் பற்றி நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான ஜோ மல்லூரி கூறிய சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் அவரது மனைவியுடன் அமர்ந்து சாப்பிட அழைத்தும் நடிகர் விஜய் மறுத்துள்ளதாகவும், அவர்கள் தங்களுடன் அமர்ந்து சாப்பிட வற்புறுத்தி அழைத்தும், விஜய் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்பவில்லை என்றும் ஜோ மல்லோரி கூறியுள்ளார்.  சிலர் இதை முன்னிலைப்படுத்தி விமர்சித்ததுடன் இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்பட்டது.

மோகன்லால்

'ஜில்லா' படத்தில் நடிகர்கள் மோகன்லாலும், விஜய்யும் இணைந்து நடித்தனர். படப்பிடிப்பின் போது நடந்த விஷயங்களை ஜோ மல்லூரி தெரிவித்தார். ஒரு நாள் விஜய் நடிகர்கள் மோகன்லாலையும், ஜோ மல்லூரியையும் தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார்.

அழைக்கப்பட்டபடி, நடிகர் மோகன்லால், அவரது மனைவி சுசித்ரா மற்றும் நடிகர் ஜோ மல்லூரி ஆகியோர் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஊசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவுக்கு அந்த வீடு அவ்வளவு அமைதியாக இருந்தது என்றார் மல்லூரி.

விஜய் மக்கள் இயக்கம்

'இதற்கிடையில், எனக்கு ஆச்சரியமாக, விஜய் மூன்று வாழை இலைகளை வைத்தார். உணவு பரிமாறும் போது மோகன்லால் சார் விஜய்யிடம் ‘நீ சாப்பிடலையா’ என்று கேட்டார். விஜய் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். எவ்வளவோ வற்புறுத்தியும் விஜய் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தவில்லை. விஜய்யும் மற்றவர்களுடன் சேர்ந்து எங்களுக்கு உணவு பரிமாறினார். அடுத்த நாள் படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த போது, இவ்வளவு வற்புறுத்தியும் ஏன் மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் அமர்ந்து சாப்பிடவில்லை என்று கேட்டேன். அவருடைய பதிலைக் கேட்டு நான் பெருமையாகவும் ஆச்சரியமாகவும் உணர்ந்தேன்.  “தம்பி, நல்லா விருந்தளிச்சிட்டு தான் சாப்பிடணும்னு என்று என் பெற்றோர் சொல்லிக் கொடுத்தாங்க. அதை இன்று வரை காப்பாற்றி வருகிறேன் என்று விஜய் சொன்னார் என்று ரசிகர்களுடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் நடிகர் ஜோ மல்லூரி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web