ஆகஸ்ட் 15 முதல் தமிழகம் முழுவதும் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்!

2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் தவெக தலைவர் நடிகர் விஜய் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். அவரது சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் தொடங்கி, 42 நாட்களில் 38 மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தற்போது, தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம், தொழிற்சங்கம் தொடங்குதல், மற்றும் தேர்தல் சின்னமாக ஆட்டோவை பெறுவதற்கான விண்ணப்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் எப்போது முழு நேர அரசியல் பயணத்தில் இறங்க போகிறார்? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜூன் 3ம் தேதி அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து முழு நேர அரசியலில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. தற்போது சுற்றுப்பயணத்தின் மூலம், விஜய் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து, கட்சியின் கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் மக்களை சந்தித்து குரல் கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 15 முதல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் அரசியல் களத்தில் அவருடைய செயல்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆதவ் அர்ஜுனா ” ஒரே மாதத்தில் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அதைப்போல, தேர்தலில் விஜய் வெற்றி பெற்று விட்டார் என்றால் சர்கார் படத்தில் உள்ளதை விட நிறையவே உதவி செய்வார்” எனவும் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!