செப்டம்பர் 13 முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்... காவல்துறை கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். செப்டம்பர் 13ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனது முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, மரக்கடை பகுதியில் இருந்து பயணத்தை தொடங்க புதிய மனு அளிக்கப்பட்டது. இன்று காலை அளிக்கப்பட்ட மனுவுக்கு கட்டுப்பாடுகளும் மாலை நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்கியது. எனினும், ரோடு ஷோ நடத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் தனது சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை மேற்கொள்ள இருப்பதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 முதல் 4மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் நடைபெற இருக்கும் நிலையில், 15 சனிக்கிழமைகளும், ஒரு ஞாயிற்றுக்கிழமையும் விஜய்யின் பயணத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. பிரச்சாரத்திற்கான இந்த பயணம், த.வெ.க.வின் முக்கியமான அரசியல் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
