திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம்... 2வது முறையாக அனுமதி மறுப்பு... கொந்தளிப்பில் தவெக தலைமை!
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13ம் தேதி தமது தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தில் விஜய் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நகரங்களில் ரோடு ஷோ மற்றும் திறந்த வேனில் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

பின்னர் 2 வது முறையாக டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அனுமதி கோரப்பட்ட போதும், அதுவும் மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தவெக டிஜிபி அல்லது நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. தற்போது தவெக மாற்று இடமாக காந்தி மார்க்கெட் பகுதியை பரிசீலித்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
