“எஸ்.ஐ.ஆர்.யால் ஓட்டுரிமையே ஆபத்தில்” ... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ!
எஸ்.ஐ.ஆர். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓட்டுரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்பதையும், எஸ்.ஐ.ஆர். காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
வீடியோவில் விஜய், “ஒரு மனிதன் உயிருடன் இருப்பதைப் போலவே ஓட்டுரிமை முக்கியமானது. ஆனால் எஸ்.ஐ.ஆர். மூலமாக மக்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்பதில் குழப்பம் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், ஒரே மாதத்தில் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வழங்குவது சாத்தியமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், பல தவெக ஆதரவாளர்களுக்கு படிவமே கிடைக்கவில்லை என தன்னிடம் தகவல்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், “படிவம் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வரவிருக்கும் தேர்தலில் ஜென் இசட் வாக்காளர்கள் மிக முக்கியம். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடக்கக்கூடும். எனவே அனைவரும் விழிப்புடன், ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் மக்கள் திரண்டு நிற்பதைக் காண வேண்டும். ஓட்டுரிமை இருந்தால்தான் ஜனநாயகத்தையும் நாடையையும் காக்க முடியும்” என்று வலியுறுத்தினார்.இறுதியாக, தனது தோழர்களை நோக்கி, “ஜென் இசட் படை பலமே… உஷாராக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள்… நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்” என உற்சாகம் ஊட்டியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
