தொடர்ந்து விஜய பிரபாகரன் முன்னிலை.!

 
விஜய பிரபாகரன்

 தமிழகத்தில் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி முதல்  ஜூன் 1ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், தபால் வாக்குகள் முடிவடைந்தது. தற்போது, மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

விஜய பிரபாகரன்
அந்தவகையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில்  அதிமுக  தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் 10 மணி நிலவரப்படி, அதிமுக 3  இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.
11 மணி நிலவரப்படி  நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டன. அந்த 2 இடங்களிலும் திமுக கூட்டணி முதல் இடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டும் விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளது. அங்கு விஜயபிரபாகரன் சுமார் 37,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 35,000 வாக்குகள் அளவில் பெற்று 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web