விஜயபிரபாகரன் டூ அண்ணாமலை... தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நட்சத்திர வேட்பாளர்கள் லிஸ்ட்!

 
விஜயபிரபாகரன்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில் தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தம்ழிஅக அளவில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. பல இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்த தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் கூட நீடிக்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் தமிழகத்தின் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் முன்னணியில் நீடித்து வருகிறார்கள் என்று பார்க்கலாம். 

தென் சென்னை:

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் இன்று காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே மாஸ் காட்டி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் அதிமுக சார்பிலும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பிலும் போட்டியிட்ட நிலையில், தொடர்ந்து தமிழச்சி தங்க பாண்டியன் முன்னணியில் இருக்கிறார். 

விருதுநகர்:

விருதுநகர் தொகுதியில், அதிமுக தேமுதிக கூட்டணியில் விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் போட்டியிட்டார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக கட்சி சார்பில் ராதிக சரத்குமாரும் போட்டியிட்டனர். இதில், விஜய் பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

விஜய பிரபாகரன்

கடலூர்: 

கடலூரில் பாமக சார்பில் போட்டியிட்ட நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு, பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

வேலூர்:

வேலூரில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். இவரைத் டர்ந்து பாஜக சாரில் ஏ.சி.சண்முகமும்,  அதிமுக சார்பில் பசுபதியும் போடியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த்தான் முன்னணியில் இருக்கிறார். இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இதுவரை 41 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தொகுதியில், திமுக கட்சி சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அதிமுகவிற்காக சிவசாமி வேலுமணியும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் ஆகியோரும் போட்டியிட்டனர். தற்போதைய நிலவரப்படி கனிமொழி முன்னணியில் இருக்கிறார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் பசிலியன் நசரத் ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த்தான் முன்னணியில் இருக்கிறார். 

கோவை:

543 தொகுதிகள் கொண்ட கோவையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடார். அவரை தொடர்ந்து கணபதி பி.ராஜ்குமார் திமுக கட்சி சார்பில் போட்டியிடார். அதிமுக கட்சி சார்பில் ஜி.ராமச்சந்திரன் போட்டியிட்டார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைமணி ஜெகநாதன் போட்டியிட்டார். இங்கு காலை தபால் வாக்குகளில் அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தருமபுரி:

தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா ராமதாஸ் போட்டியிடார். திமுக சார்பில் மணியும், அதிமுக சார்பில் ஆர்.அசோகனும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், தற்போது சவுமியா முன்னிலையில் இருக்கிறார். 

நீலகிரி:

நீலகிரி தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். அவரைத்தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் லோகேஷ் தமிழ் செல்வனும், பாஜக கட்சி சார்பில் எல்.முருகனும் போட்டியிட்டனர். இதில், தற்போது ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web