விஜயபிரபாகரன் வளர்த்த நாய்க்கு சர்வதேச நாய் கண்காட்சியில் சாம்பியன் பட்டம்!
நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்து வரும் நாய், சர்வதேச நாய் கண்காட்சியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்வதேச நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சி மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் கென்னல் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாய் இனங்களை சேர்ந்த 365 நாய்கள் கலந்து கொண்டன. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட வெளி மாநிலங்களிலும் இருந்து நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் நாய்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் வகையில்,மோப்ப திறன் பராமரிப்பு நிலை கட்டளை கேட்பது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளில் சிறந்து விளங்கிய நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் முடிவில், அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட இங்கிலீஸ் ஷட்டர் இனத்தைச் சேர்ந்த நாய், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் நாய் ‘ஒட்டுமொத்த சாம்பியன்’ பட்டத்தை வென்றது. சுற்றுலா பயணிகள் பலர், ஆர்வமுடன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான நாயுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
