விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடாது... தேமுதிக அறிக்கை!

 
கோட்

 தமிழ் திரையுலகில் கேப்டனாகவும் முன்னாள் தேமுதிக தலைவருமான  விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின்  மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.  

கோட்
கேப்டனை முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்க்க வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.

கோட்


எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்க்க  வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் யாரும் அனுமதி பெறவில்லை என தேமுதிக சார்பில் தெரிவித்திருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web