டெல்லி புறப்பட்டார் பிரேமலதா... விஜயகாந்துக்கு இன்று பத்மபூஷன் விருது!

dinamaalai

 
விஜயகாந்த்

மறைந்த பிரபல நடிகரும், தேமுதிமுக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு இன்று மே 9ம் தேதி டெல்லியில் பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ள நிலையில், விருதை பெறுவதற்காக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். முதலில் கோயிலுக்கு கொண்டு செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிமுக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த்

அவரது உடலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அந்த அலுவலகத்தை கேப்டன் கோயில் என்று தேமுதிகவினர் அழைக்கின்றனர். அங்கு வரும் பொதுமக்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.இதற்கிடையில், விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவைகளை பாராட்டி, மத்திய அரசு, பத்மபூஷன் விருதை அறிவித்தது. இதனிடையே கடந்த மாதம் நடந்த விழாவில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

பிரேமலதா

ஆனால், அன்று அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று மே 9ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது சகோதரர் சுதீஷ் உள்ளிட்டோர் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web