விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

 
பிரேமலதா
 

விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும். தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

பிரேமலதா

கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள். மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும். ஏற்கனவே நமது நாட்டில் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அமெரிக்காவின் வரி உயர்வால் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். பிரதமர் உடனடியாக அமெரிக்காவிடம் பேசி சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

விஜய் பிரேமலதா

கச்சத்தீவை நாம் எப்போது விட்டுக்கொடுத்தோமோ அப்போதே நமது மீனவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. கச்சத்தீவு மீட்பு தான் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு. இதை நிச்சயமாக இரண்டு நாடுகளும் ஐநாவிடம் பேசி முடிவெடுக்க வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?