லட்சக்கணக்கில் சீட்டு பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சி நிர்வாகி!

 
திருவண்ணாமலை முருகன்

ஏலச் சீட்டு நடத்தி, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிச் சென்ற விஜய் கட்சி நிர்வாகியின் வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இவரிடம் சீட்டு போட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததும், ஏலச்சீட்டு நடத்தி வந்த முருகன், பணத்தை ஏமாற்றி விட்டு போக்கு காட்டுவதாக மக்கள் கொந்தளித்தனர். 

திருவண்ணாமலை முருகன்

முருகனின் தில்லாங்கடி வேலை குறித்து மாவட்ட கலெக்டரிடமும், போலீசாரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், விஜய் கட்சி நிர்வாகி முருகனின் வீட்டை பத்து பூட்டுகளை போட்டு பூட்டினர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், பெண்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு விசாரணை செய்துவருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!