இளநீர், நீர்மோர், வகைவகையான பழங்கள்... பொதுமக்களுக்கு வாரி வழங்கிய விஜய் கட்சியினர்!

 
இளநீர்

 அதிமுக, திமுகவினர் அமைக்கின்ற நீர்மோர் பந்தல்களில் பெரும்பாலான இடங்களில் அரசியல் தலைவர்கள், பந்தலைத் திறந்து வைத்து கிளம்பியதும் கட்சியினரே பந்தலில் உள்ள பழங்களைக் காலி செய்து விட்டு இடத்தை காலி செய்து வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர், கையில் எடுத்து செல்ல முடியாத அளவில் கைகளில் பழங்களை அள்ளி கொடுத்ததால் மகிழ்ச்சியில் மக்கள் திளைத்தனர்.

தண்ணீர் பந்தல்

தமிழகத்தில் கோடை வெப்பமானது வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தண்ணிர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறதுஅந்த வகையில் நடிகர் விஜயின் உத்தரவின்படி தமிழக வெற்றி கழகத்தினரும் கோடை தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர். அதன்படி தாம்பரம் வர்த்தக அணி சார்பில் தாம்பரம் கடப்பேரியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் டாக்டர் செந்தில்குமார் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

தண்ணீர் பந்தல்


அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு, இளநீர், தர்பூசணி, வெள்ளரிகாய், பழரசம், வழைபழம், கிரிணிபழம் உள்ளிட்டவைகளை வழங்கினர். அதிமுக, திமுகவினர் மிஞ்சும் வகையில் தமிழக வெற்றி கழகத்தில் பொதுமக்கள் கையில் எடுத்து செல்ல முடியாத அளவில் கைகளில் பழங்களை அள்ளி கொடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் பொருட்களை எடுத்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web