யாருமே எதிர்பார்க்கலை... விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சறுக்கல்; முன்னிலை நிலவரம்!

 
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று  காலை 8 மணிக்கு  தொடங்கிய நிலையில், 7வது சுற்று முடிந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர்  57,393 வாக்குகள் பெற்றுமுன்னிலையில் உள்ளார். 2ம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி 24,130வாக்குகள் பெற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 4704 வாக்குகள் பெற்று பின் தங்கியிருக்கிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாமக வேட்பாளருக்கு ஈடுகொடுப்பார் என்றும், அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியாகி வரும் வாக்குஎண்ணிக்கை விவரங்கள் நாம் தமிழர் தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு  311 பேர் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டி
இந்த இடைத்தேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!