மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. அப்பாவி மக்கள் 11 பேர் படுகொலை.. போலீசாருக்கு விடுமுறை ரத்து !!

 
மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் குக்கி இனக்குழு மக்களுக்கும், தாழ்வான நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே மே 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது, 

பொருளாதார நன்மைகள், மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை பெரும்பான்மை மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் அரசின் முடிவுக்கு எதிராக மலையக மக்கள் பேரணி நடத்தினர். இதற்கு எதிரான தரப்பினர் தாக்குதல் நடத்தியதால், மே 3 ஆம் தேதி முதலில் மோதல் வெடித்தது. அப்போது பற்றிய தீ இன்றுவரை எரிகிறது. 

மணிப்பூர்

இந்த வன்முறையின்போது ஒரு தரப்பினர் அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஆயுதக்கருவூலம் உள்ளே புகுந்தும், காவல்நிலையங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிபொருட்களை வன்முறையில் ஈடுபட்டவர்கள் எடுத்துச்சென்றனர். 

இதனால் அங்கு பதற்றம் நீடித்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக அமித் ஷா சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாண முடியவில்லை.

அதேநேரம், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு மீண்டும் தாக்குதல் நடந்துள்ளளது. இந்த தாக்குதலில் குறைந்தது கிராம மக்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மணிப்பூர்

காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. 

மீண்டும் வன்முறை வெடித்ததால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதனால் விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மணிப்பூரில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web