திருப்பதியில் ஜூலை 9ம் தேதி விஐபி தரிசனம் ரத்து!

 
திருப்பதி
திருப்பதி திருமலையில் ஜூலை 9ம் தேதி ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் இம்மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூலை 9ம் தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

எனவே ஜூலை 9ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அதன் பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு பிறகு தாம் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அதே போன்று இந்த பணிகள் காரணமாக ஜூலை 9ம் தேதியும், ஜூலை 16ம் தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுவதால் விஐபி தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web