திருப்பதியில் 9 நாட்கள் பிரம்மோற்சவத்தில் மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் ரத்து!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!


 
 திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து  அன்னமய்யா பவனில் மாவட்ட நிர்வாகம், திருப்பதி மாநகராட்சி, போலீசார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செயல் அதிகாரி திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 24ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல்வர் சந்திரபாபுநாயுடு மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இந்த நாட்களில்  தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் சுவாமி வீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெறும். 28ம்தேதி மாலை 6.30 மணிக்கு கருட வாகன சேவை நடைபெறுகிறது.  பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்கள் அலங்காரத்திற்கு 60 மெட்ரிக் டன் மலர்களால் அலங்கரிக்கப்படும்.  

திருப்பதி
இதனைக் காண பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்து திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து  அறைகள் ஆன்லைனில் வழங்கும் கோட்டா குறைக்கப்பட்டு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிபாரிசு கடிதங்களின் மூலம் வழங்கப்படும் அறைகள் ஒதுக்கீடு 9 நாட்கள் இருக்காது. கடந்த ஆண்டு 9 நாட்களுக்கு ஒரு லட்சம் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1.16 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கருட சேவையை தவிர்த்து மற்ற நாட்களில் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 13000 இலவச சர்வ தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.  இந்த ஆண்டு 25000 இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?