வைரல் வீடியோ!! லியோவுக்கு போட்டியாக ஜப்பான் !!

 
japan

பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவனாக வந்து இளசுகளின் இதயம் கவர்ந்த நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ஜப்பான். இந்த திரைப்படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியுடன் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர்  என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்திற்கான இசை ஜி.வி.பிரகாஷ்.  ரவிவர்மன் ஒளிப்பதிவு. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் உருவாவதால் மிக பிரம்மாண்டமாக விறுவிறுப்பாக படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கி  வருகிறார். திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 3ம் தேதி தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

japan


இந்த நிலையில் நடிகர் கார்த்தியின்  ஜப்பான் திரைப்படம்  தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் கார்த்தி நடிப்பில் புதிய திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்பெல்லாம் .  தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலும் விஜய் அல்லது அஜித் படங்கள் வெளியாகி வந்தன ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்தி நடிக்கும் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web