வைரல் வீடியோ!! கழிவு நீரில் கட்டுகட்டா பணம்!! குவியல் , குவியலாய் அள்ளிச்சென்ற மக்கள்!!

 
கழிவு நீரில் பணம்

கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேணும் சிநேகிதா? என்பது பிரபலமான சினிமா பாடல் வரிகள்.  இதற்கேற்ப  காலை எழுந்து குடிக்கும் தண்ணீர் முதல் இரவு தூங்க செல்லும் வரை எல்லாவற்றுக்கும்  பணம் தான் பிரதானம் என்ற நிலை வந்து விட்டது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எதையாவது செய். எதை செய்தாலும் தப்பில்லை. காசு சம்பாதி என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் வேதமந்திரம் ஆகிவிட்டது. நாய் வித்த காசு குரைக்காது என்பது பழமொழி. அதற்கேற்ப காசு எங்கே எப்படி கிடைத்தாலும் சரி எடுத்திடு என்பது தான் தற்போதைய வாழ்க்கை முறையாகிவிட்டது.

அதே போல் பீகாரில் கழிவு நீரில் ஓடிய பணக்கட்டுக்களை பார்த்து கழிவு நீர் என்றும் பாராமல் அதில் இறங்கி பணத்தை குவியல் குவியலாக அள்ளத் தொடங்கினர். பீகார் மாநிலம் பாட்னாவில் சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஓடிய கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.  அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்ததும் உடனே பாலத்தில் அடியில் ஓடிக்கொண்டிருந்த கழிவுநீரில் குதித்து ரூபாய் நோட்டுக்களை அள்ளத் தொடங்கினர். சாக்கடைக்குள் இறங்கியவர்கள் 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றனர்.

பணம்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். சிலர் இந்த நோட்டுக்கள் சினிமா சூட்டிங்கிற்காக வைக்கப்பட்டவை எனவும், சிலர் உண்மையான நோட்டுக்கள் கள்ளப்பணம் எனவும் தெரிவித்துள்ளனர். பலவிதமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. இது குறித்து காவல்துறையினர். முதலில் கைகளில் சிக்கிய பணம் போலியானதா , உண்மையானதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதே நேரத்தில் இதனை கழிவு நீரில்  விட்டது யார் என்பது குறித்தும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகிறது.  இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரூபாய் நோட்டுகளை எடுக்க கழிவுநீரில் பொதுமக்கள் சிலர், குதித்து எடுத்து செல்கின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web