வைரல் வீடியோ!! மைனஸ் 15 டிகிரியில் பிகினியில் குளித்து கிளுகிளுப்பூட்டும் கமல் பட நடிகை!!

 
ரகுல் ப்ரீத் சிங்க்

தமிழில் இளையதளபதி நடிப்பில் வெளியான கில்லி ரசிகர்களிடையே சக்கைபோடு போட்ட படம். இதன் கன்னட பதிப்பில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர்  தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்  ரகுல் ப்ரீத் சிங்க். இவர் தெலுங்கு, ஹிந்தி என பிரபல நடிகையாக  இருந்து வருகிறார்.  ரகுல் ப்ரீத் சிங் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர்  தனியாக ஜிம்மே நடத்தி வருகிறார். ரகுல் பிரீத் சிங், தற்போது சவால் வீடியோ ஒன்றை  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிகினி மட்டுமே அணிந்து  உடல் விரைத்துவிடும் கடுங்குளிரில் குளித்து எழுந்து வந்துள்ளார். இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.  சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார்.  இந்தி திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.  உடற்பயிற்சிக்கு பின் ஒரு நாளைக்கு  20 மணிநேரம் வரை கூட வேலை செய்யமுடியும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

ரகுல் ப்ரீத் சிங்க்

இந்த வீடியோவில்  நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த, பூப்போட்ட பிகினி உடையில்  உறைபனி   நீரில் மூழ்கி, அப்படியே எழுந்து புதுப்பொலிவுடன் வெளிவருகிறார். வந்ததும், குளிரில் நடுங்கியபடி, எவ்வளவு குளிராக உள்ளது என விவரிக்கிறார். அத்துடன்  மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் யாராவது முடியுமா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.  எனக்கு நான் தான் போட்டி. மற்றொருவருடன் போட்டி கிடையாது.  நீங்கள்  உங்களுடனேயே போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் .   தெலுங்கில் போட்டியிருக்கிறது, தமிழில் போட்டியிருக்கிறது என நினைத்து கொண்டு, அதற்கேற்ப நான் செயல்பட்டால் மரணம் தான் மிஞ்சும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web