வைரல் வீடியோ.. அதிக மதிப்பெண் எடுத்த +2 மாணவர்களுக்கு தலைவாழை விருந்து.. காவலர் நெகிழ்ச்சி செயல்!

 
இளங்கோ 

புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. இதில், புதுச்சேரியில் ஒரு அரசுப் பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று புதுச்சேரி மாநிலத்துக்கு பெருமை சேர்த்தது. இந்நிலையில், புதுச்சேரி போலீஸார், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த வாழையிலையில் சாப்பாடு பரிமாறி உபசரித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதுச்சேரி திருபுவனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருபுவனை திருவண்டார் கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருபுவனை  சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ  தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், பேனாக்களை வழங்கியும் கவுரவித்தார்.

மேலும் தலைவாழை இலையில் வடை, பாயசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என சுவையான உணவுகளை வழங்கி, மாணவர்களையும், பெற்றோரையும் உற்சாகப்படுத்தினார். வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் உங்கள் பார்வை இருக்க வேண்டும் என சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுறுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web