வைரல் வீடியோ... ஆளுக்கு ஒரு கேன் ... தடம் புரண்ட சரக்கு ரயிலில் டீசலை ஆட்டைய போட்ட பொதுமக்கள்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரத்லம் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டது. இந்நிலையில், ரயில் பெட்டிகளில் இருந்த டீசல் வெளியே கசிய தொடங்கிவிட்டது. அந்தப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் உடனே வீடுகளில் இருந்து வாளிகள் மற்றும் கிடைத்த பாத்திரங்கள் , டப்பாக்களில் டீசலை நிரப்பிக்கொண்டு சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
मध्यप्रदेश के रतलाम में डीज़ल ले जा रही मालगाड़ी के वेगन देर रात पटरी से उतर गई थी
— Najafgarh Confessions (@najafgarhconfes) October 4, 2024
जिसके बाद वेगन से लीक हो रही डीज़ल को लोगों ने ने डीजल डब्बों में भर कर अपने घर ले गए
जिसे जो मिला उसमे डीज़ल भर कर लोग चलते बने #IndianRailways #Ratlam #Railway pic.twitter.com/UclvqqgaC4
இச்சம்பவத்தினை அடுத்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, டீசல் கசிவை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ரத்லம் கோட்ட ரயில்வே மேலாளர் ரஜ்னிஷ் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு பெட்டியிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் கசிய தொடங்கிவிட்டது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே வாரியத்திற்கு தகவல் அளிக்கும் முன் கிடைத்த டீசலை பங்கு போட்டு பிரித்து கொண்டிருந்தனர். ரயில்வே விரைந்து நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
