வைரல் வீடியோ... உலகிலேயே மிக மிக நீளமான தாடை கொண்ட இளைஞர் .... விட்டுச்சென்ற காதலி!
ஜப்பானில் வசித்து வருபவர் ஜோனோச்சி. இந்த இளைஞர், தனது முகத்தில் உள்ள விசித்திரமான அமைப்பால் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார். இவரை டிக்டாக்கில் 4 லட்சம் ஃபாலோயர்ஸ் பின்தொடர்கின்றனர். யூடியூப்பில் 3.47 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் 55,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
இவர் தனது நீளமான தாடை மூலம் “Longest Chinned YouTuber” என்ற பெயரையும் பெற்றுள்ளார். சிறுவயதில் அவரது தாடை அமைப்பு சாதாரணமாக இருந்ததாக தெரிகிறது. 10 வயதுக்குப் பிறகு அதிகமாக வளரத் தொடங்கியதால், பள்ளியில் ‘Chin’ எனவே அழைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் “Jaw Protrusion” எனக் கூறப்பட்டது. அதனுடன், மரபணு பிரச்சனை, அதிக கால்சியம் எடுத்தல் போன்ற காரணங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதால் மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. x-ray பார்த்ததும், “இதுபோன்ற தாடையை நான் பார்த்ததே இல்லை!” என்று பகிரங்கமாக கூறியதாகவும் தெரிகிறது.
ஒரு நேரத்தில் தனது தாடை அமைப்பால் காதலில் தோல்வி கண்ட ஜோனோச்சி, தற்போது தன்னம்பிக்கையுடன் அதனை ஏற்றுக்கொண்டு நகைச்சுவை கலந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு “நான் 168cm தான்; யாராவது இன்னும் 2cm குடுத்துட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்!” என நகைச்சுவையுடன் கூறியுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
