அட்ரா சக்க... சச்சினின் 2 சாதனைகளை ஒரே நாளில் முறியடித்த விராட் கோஹ்லி... !!

 
virat sachin

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் விராட் கோஹ்லி   சச்சின் டெண்டுல்கர் சாதனையை  முறியடித்துள்ளார்.    இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  

விராட் கோலி

ஒருநாள் போட்டிகளில் 50வது சதம், உலகக்கோப்பை தொடர்பில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை கோலி முறியடித்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார் விராட் கோலி. 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். அதே போல் 2003ல் நடைபெற்ற  உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் எடுத்திருந்தார்.

விராட் கோஹ்லி

அதுவே தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் 692 ரன்களை எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்துள்ளார்.  தற்போது நடந்து வரும்  உலகக்கோப்பையில் வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி சதம் அடித்திருந்த நிலையில் இன்று 3வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 29, ஒரு நாள் போட்டிகளில் 50, டி20 போட்டிகளில் 1 என மொத்தம் 80 சதங்களை விளாசி தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web