விருதுநகர் மாவட்டம் முதலிடம்!! வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி சதவீதம் அதிகம் !!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 8.65லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 48000க்கும் மேற்பட்டோர் பல்வேறு  காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10- முதல் 29ம் தேதி வரை 79 மையங்களில் நடைபெற்றன.

மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8ம் தேதி  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் காலை 10 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்தவரை மொத்தமாக    94.03 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில்  மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38 % தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.  வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி.  விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 

அன்பில் மகேஷ்

இந்நிலையில் காலை 9 .30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்  உயர்கல்விக்கு பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் இவைகளை தீர்க்கும் வகையில் இந்த உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

தேர்வு

இந்த உதவி எண்ணை அழைத்தால் பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். மதிப்பெண்களை நினைத்து அச்சம் வேண்டாம் எனவும், மாணவர்களின் குறிக்கோளை நிறைவேற்ற இந்த உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web