விருதுநகர் : முன் விரோதத்தில் காவலாளி வெட்டி கொலை!

 
நீராவி

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் முன்விரோதத்தில் காவலாளியை வெட்டி கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் நீராவி (56). இவரது மனைவி பரமேஸ்வரி. இவரது மகள் பாண்டிமுனி(21). நீராவி தளவாய்புரத்தில் உள்ள வீட்டில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நீராவிக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு நீராவி வழக்கம்போல் தளவாய்புரத்தில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.

இரவு 11 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்த அய்யனார், நீராவி உடன் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு என்ன தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த நீராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தளவாய்புரம் போலீஸார் நீராவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய அய்யனாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web