விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு தேசிய தூய்மை விருது!

 
விசாகப்பட்டினம் துறைமுகம்

இந்தியா முழுவதும்  தூய்மை இந்தியா திட்டம்   ஸ்வச் பாரத் என்ற பெயரில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல் மற்றும் சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. 

 

விசாகப்பட்டினம் துறைமுகம்

இந்நிலையில்  மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் தூய்மை மற்றும் சுகாதாரம் வாய்ந்த துறைமுகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.இந்தப் போட்டியில்  2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்துள்ளது. 

விசாகப்பட்டினம் துறைமுகம்

 

துறைமுக செயலாளர் வேணுகோபால் கூறும்போது, தூய்மை மற்றும் சுகாதார திட்ட நடவடிக்கையில், விசாகப்பட்டினம் துறைமுகம் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது  என அமைச்சகம் மெச்சத்தக்க வகையிலான பாராட்டுகளை தெரிவித்து உள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2வது இடம் பெற்றுள்ளது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் 3வது இடம் பிடித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?