பரபரப்பு வீடியோ.... அரசியலில் இருந்து விலகும் விகே பாண்டியன்!

 
விகே பாண்டியன்

 இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலுடன் சில மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.  கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அடுத்த முதல்வர் குறித்து   தகவல் இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன் என  முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.  மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளை  வழங்கினோம். இருந்தும் தோல்வி அடைந்ததை நினைத்து வருந்துகிறோம். இந்த தோல்விக்கு  வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பாண்டியன்  கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என முன்னாள் முதல்வர்  நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.

விகே பாண்டியன்
இந்தத் தேர்தலை பொறுத்தவரை  நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட, தமிழகத்தை சேர்ந்த  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தோல்விக்குப் பிறகு பொதுவெளிக்கு வரவே இல்லை. இந்நிலையில் வி.கே.பாண்டியன் தற்போது வீடியோ பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். நான் அரசியலுக்கு வந்தது பதவிக்காக அல்ல. நவீன் பட்நாயகிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். என்னுடைய வாழ்வியலுக்கு   மூதாதையர்களின் சொத்துக்கள்  என் வசம் உள்ளது. நான் ஐஏஎஸ் சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web