அதிர்ச்சி... அடுத்தடுத்து வெடித்து சிதறிய எரிமலை.. இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை!

 
இந்தோனேசியா எரிமலை

அடுத்தடுத்து எரிமலைகள் வெடித்து சிதறுவதால் இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருவாங் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலையைச் சுற்றி 4 கி.மீ., தூரத்துக்கு எந்தப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எரிமலை வெடிப்பு காரணமாக அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், எரிமலை வெடிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த மாதத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். முன்னதாக கடந்த 16ம் தேதி ருயாங் தீவில் எரிமலை வெடித்தது. இதனால், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!