3 நாட்களில் 5வது முறையாக வெடித்த எரிமலை.. சுனாமி எச்சரிக்கையால் ஊரை காலி செய்த 11,000 மக்கள்!

 
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ருவாங் எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்துள்ளதாக இந்தோனேசியாவின் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சுலவேசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை தொடர்ந்து 5 நாட்கள் வெடித்து சிதறியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். இந்த எரிமலை வெடிப்பு காரணமாக நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.சுனாமி பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 11,000 பேர் அபாய பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் மனாடோ நகர விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது, மேலும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் 725 மீ (2,378 அடி) ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிமீ தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 270 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் செயலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web