இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்... சசிதரூர் திடீர் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!

 
சசிதரூர்

 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். காங்கிரஸ்  எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக் கூறியுள்ளார். இத்தகவலால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே 3 முறை  மக்களவை தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது 4வது முறையாக அத்தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். இது குறித்து சசிதரூர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண் எம்.பி.க்களுடன் சசிதரூர் செல்ஃபி: சர்ச்சையை கிளப்பிய வைரல் புகைப்படம்

அதில்  அதன் பிறகு என்னால் முடிந்த வரை மக்கள் பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னால் முடிந்தவரை எல்லா நலப் பணிகளையும் இத்தொகுதிக்கு செய்வேன். அதன் பிறகு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதற்காக இதுவரை போதும். இனி தேர்தலில் போட்டியிடக்கூடாது  என முடிவு செய்துள்ளேன். 5 வருடத்திற்கு பிறகோ 5 வருடத்திற்கு முன்பாகவோ தேர்தல் வந்தால் இனி போட்டியிட மாட்டேன். அதே நேரத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்தே  என்னுடைய மக்கள் நல பணிகளை தொடர்வேன் எனக்  கூறியுள்ளார்.சசிதரூர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக் கூறியிருப்பது  காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web