தொண்டர்கள் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்!

 
அச்சுதானந்தன்

கேரள முன்னாள் முதல்வர்  அச்சுதானந்தன். இவரது  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் . அவருக்கு வயது 101.

ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்வரகா இருந்தார்.   திருவனந்தபுரத்தில் வீட்டில் இருந்த அச்சுதானந்தனுக்கு ஜூன்  23ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக   மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் தொடந்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சுதானந்தனை முதல்வர்  பினராயி விஜயன் நேரில் சென்று  அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள், குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது