கதறியழும் தொண்டர்கள்... எடப்பாடி தலைமையில் அதிமுகவுக்கு தொடர்ந்து 9வது தோல்வி!

 
எடப்பாடி பழனிசாமி

இன்று காலை மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையேற்ற பின்னர், அக்கட்சித் தொடர்ச்சியாக சந்தித்து வரும் 9வது தோல்வி இது என அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதன் பின்னர் 2019ம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது அதிமுக. மீதியுள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தது. இதிலும் தேனியில் ஓபிஎஸ் மகன் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யாக மக்களவைக்கு சென்றார்.

அதன் பின்னர் 2019ல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. பின்னர் 2021 ல் நடைப்பெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.

2019 ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. 

பின்னர் அதனைத் தொடர்ந்து 2022ல் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பெரிய வெற்றியைப் பெற தவறியது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டிருந்த நிலையில், 2022ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் கூட நீடிக்காமல் பின்னடைவை சந்தித்து வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web