குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள்... பெரும் பரபரப்பு!
கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் தெருவில் கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் வழக்கம் போல் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை எடுப்பதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக 100க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்துள்ளன. அங்கு கிடந்த அனைத்து வாக்காளர் அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் மகேஷ், வாக்காளர் அட்டைகள் எப்படி குப்பை தொட்டிக்கு வந்தது. இதனை யார் இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பை வண்டியில் கிடந்தது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
