விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் வரிசையில் நின்ற பொதுமக்கள்! ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

 
விக்கிரவாண்டி

இன்று காலை 7 மணிக்கு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. காலையிலேயே ஆர்வமுடன் பொதுமக்கள் திரண்டு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த தொகுதியில் திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர்  ஸ்டாலின் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சௌமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி   தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும்  நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இன்றைய இடைத்தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web