நாளை வாக்குப்பதிவு... வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் இந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்!

 
BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே கட்டமாக முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைப்பெற உள்ள நிலையில், தேர்தலில் வாக்களிக்க, எங்கேயோ வைத்த வாக்காளர்கள் அடையாள அட்டையைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையெனில் கவலைப்படாதீங்க.

பூத் சிலிப்

பூத் ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்கார்டு இதெல்லாம் இருந்தால் தான் நீங்கள் வாக்களிக்க முடியும் என்பது கிடையாது. 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்குமே வாக்குரிமை உண்டு. இந்த ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை நீங்கள் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன்/குடிமகள் என்பதை நிரூபிக்க கொண்டு சென்றாலே நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்.

ஒரே நிபந்தனை, வாக்காளர் பெயர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 

  1. ஆதார் ஆட்டை 
  2. பான் கார்ட் 
  3. ஓட்டுநர் உரிமம் 
  4. பாஸ்போர்ட் 
  5. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம் 
  6. வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை
  8. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
  9. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு
  10. மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  11. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

 பூத் சிலிப், அடையாள அட்டை இல்லையா?இத எடுத்திட்டு போங்க!

 

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த மக்களவைத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபைக்கான தேர்தலும் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web