அரசு மருத்துவமனையில் மூடியே கிடக்கும் காத்திருப்பு மற்றும் கழிவறைகள்.. நோயாளிகள் கடும் அவஸ்தை!

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலுபள்ளியில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் காத்திருப்பதற்கு வசதியாக ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி காத்திருப்பு அறைகள் உள்ளன. மேலும் இங்கு பொது சுகாதார வளாகம் மற்றும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பொதுமக்கள் காத்திருக்கும் அறை பூட்டியே கிடக்கிறது.
மேலும் கழிப்பறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மாறாக இரண்டு அறைகளிலும் பயனற்ற அட்டைப் பெட்டிகளுடன் மருத்துவமனையின் கழிவுகள் குவிந்துள்ளன. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவமனை நுழைவு வாயிலிலோ, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் தரையிலோ, நடைபாதைகளிலோ உட்கார, உட்கார போதிய இடவசதி இல்லை. அதேபோல், பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால், நீண்ட தூரம் நடந்து சென்று, திறந்த வெளியில் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், கழிப்பறைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
அரசு செலவில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு கட்டடங்களையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, விரைவில் காத்திருப்பு அறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!