திருப்பதியில் 12 மணி நேரம் காத்திருப்பு... பக்தர்கள் கடும் அவதி!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

 திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. வருடத்தின் எல்லா நாட்களிலும்  உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்  வருகை இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோடை விடுமுறை முடியும் வரை விவிஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.  சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

திருப்பதி

இதனால்  தரிசனத்திற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் கோவிலில் நேற்று 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  43,557 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஒரு நாள் உண்டியல் வசூல் ரூ2.90 கோடி  காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில்  22  காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்வதாக தெரிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web